கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்...!

இன்ஸ்டாவில் தீயாய் பரவும் காஜலில் ஒட்க்கவுட் வீடியோ..!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்...!

கர்ப்பகாலத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு மாலத்தீவில் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் தமிழில் கமலின் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினார் காஜல். ஒருவேளை அவர் கர்ப்பமாக இருப்பாரோ என தகவல்கள் உலா வந்த வேளையில், ஆம் என அவரது கணவர் காஜல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். சின தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு வீட்டில் எளிமையான முறையில் சீமந்தமும் நடைபெற்றது. இந்த நிலையில், கர்ப்பகாலத்திலும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டி, மெருதுவான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் காஜல். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.