பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் நடனமாடிய கரண் ஜோஹர்.. வைரலாகும் வீடியோ..!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் நடனமாடிய கரண் ஜோஹர்.. வைரலாகும் வீடியோ..!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை கஜோலுடன் சேர்ந்து கரண் ஜோஹர் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் தனது 50வது பிறந்தநாளை மும்பையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார்.

கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் மே 25 அன்று கொண்டாடப்பட்டது. இந்த விருந்தில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருவிழா போல் நடந்தேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடல் பாடல் என களை கட்டியது. இந்த நிலையில் பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு கரண் ஜோஹர் நடிகை கஜோல் இணைந்து ஆடிய அசத்தல் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

A post shared by


வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பிக்கு - விளக்கமளித்த ஓட்டோ நிறுவனம்..!!

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படம் தமிழ்,தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார் பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இத்திரைப்படம் குடும்ப பின்னணியாக இருக்கும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜயின் பிறந்தநாளன்று வாரிசு -ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 

 

இதனை தொடர்ந்து இந்த போஸ்டரை ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வைரலானது. மேலும் இந்த சர்ச்சை குறித்து ஓட்டோ நிறுவனமானது விளக்கமளித்துள்ளது. 

அதில் தெரிவித்து இருப்பதாவது ஓட்டோவில் நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக்கொள்ளா மாட்டோம். மேலே இருக்கும் புகைப்படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல.பொழுதுபோக்கிற்காக மட்டுமே மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி உள்ளனர். வாரிசு அணிக்கு எங்கள் மணமார்ந்த வாழ்த்துக்கள் என அதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்றன்

பிரபல பாடகியான சின்மயி அனைவர்க்கும் நன்கு பரிட்சயமான ஒரு முகம், இவர் பல நடிகைகளுக்கு பிண்ணனி குரல் கொடுத்து இருக்கிறார், அதிலும் குறிப்பாக நடிகை சமந்தாவிற்கு குரல் கொடுப்பதில் இவர் அதிக பிரபலமானவர். இவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை ஹேஷ் metoo என்பதன் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரபல பின்னணிப்பாடகி சின்மயி முன்வைத்து வந்தார்.

 

சமீபத்தில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், இணையத்தில் அநாகரீகமான விமர்சனங்களுக்கு தொடர்ந்து உள்ளானார். இந்நிலையில் கொச்சையான புகைப்படங்களை அனுப்பியவர்கள் குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்ததால், தன் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

சாய்பல்லவியின் கார்கி படத்தை வழங்கும் சூர்யா, ஜோதிகா!!

சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கவுள்ளது.

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.  சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா !!

கார்கி படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

 

இந்நிலையில் சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.

இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையால் உயிரிழந்த பிரேசிலை சார்ந்த அழகி...

2018 ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் பெற்ற கிளெய்சி கொரிய்யா தனது தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இவர் தென்கிழக்கு நகரமான மெகேயில் நிரந்தர ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தவராவார்.

 

இதன் இடையில் இவருக்கு தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அண்மையில் அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து கிளெய்சிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த ஐந்து நாட்களில் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று அதன் பின் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை தொடர்ந்து தனது சுயநினைவை இழந்து இரண்டு மாதங்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கிளெய்சி கொரிய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மேலும் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை விசாரிக்கவும் கிளெய்சியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவரின் இறப்பு செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.