“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

மலையாள படமான லவ் படத்தின் தமிழாக்கம் படம் ‘லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

பரத் கதாநாயகனாக நடிக்கும் “லவ்” படத்தில், அவரது மனைவி மற்றும் கதாநாயகியாக வாணி போஜன், மற்றும் நண்பர்களாக விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ராதா ரவி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாள படமான ‘லவ்’ படத்தின் தமிழாக்கமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்கத்தில், மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. 

மேலும் படிக்க | அமீரின் 'உயிர் தமிழுக்கு’ திரைப்படம்...! வெளியீட்டு உரிமையை பெற்றது யார்...?

இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது..

பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம்.  தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. 

ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது…

மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி. 

மேலும் படிக்க | ‘‘ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்....” கட்டா குஸ்தி வெற்றி விழாவில் பேசிய ஹீரோ...!

நடிகர் டேனியல் பேசியதாவது…

காலேஜ் படிக்கும் போது எங்க ஏரியாவில் நடிகர் பரத் ஜிம்முக்கு போகும் போது பார்த்திருக்கிறேன். இப்போது அவரோடு நடித்தது மகிழ்ச்சி. நடிகை வாணியுடன் இன்னொரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். மிக நல்ல நடிகை. இந்தப்படம் மிக திரில்லிங்கான கதை, நிறைய டிவிஸ்ட் இருக்கிறது. இயக்குநர் R.P.பாலா சூப்பரான ஆக்டர் அவரை நடிகராக பார்க்க ஆசை. இந்தப்படம் என்னோட கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி. 

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..

என்னுடைய இயக்குநர் தயாரிப்பாளர் R.P.பாலா மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பரத் வாணி போஜன் வெற்றிக்கூட்டணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் கதையில் நிறைய ஆச்சர்ய திருப்பங்கள் இருக்கிறது. உங்களை மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி. 

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை இழிவுபடுத்திய புகார்...! முன்னாள் ஊழியர் கைது...!