விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபு.. வலுக்கும் எதிர்ப்பு.. அப்படி என்ன விளம்பரம் அது.?

புகையிலை நிறுவன விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த மகேஷ்பாபுவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபு.. வலுக்கும் எதிர்ப்பு.. அப்படி என்ன விளம்பரம் அது.?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல்,விளம்பரங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே,புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால், அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதேபோல்,சமீபத்தில் சாய்பல்லவி 2 கோடி ரூபாய் கொடுத்தும் முக அழகு கிரீம் விளம்பர படமொன்றில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் கிரீம் போட்டு கருப்பாக உள்ள நிறத்தை சிவப்பாக மாற்ற முடியாது.

எனவே இந்த விளம்பர படம் மூலம் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று காரணமும் சொன்னார்.அவரே அப்படி இருக்கும்போது மகேஷ்பாபு பெரிய கோடீஸ்வரர். அவரது தந்தை நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார்.

பெரிய அளவில் சொத்து இருக்கிறது. இப்படி புகையிலை நிறுவன விளம்பர படத்தில் நடிப்பது சரியா என்று முகநூல் பக்கத்தில் கடுமையான கண்டனங்களை பலரும் பதிவு செய்து வருகின்றனர். இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.