200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் மாயோன்!! - பார்வையற்றவர்கள் காண்பதற்காக சிறப்பு ஏற்பாடு!

சிபிராஜ் நடிப்பில் உருவான மாயோன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் மாயோன்!! - பார்வையற்றவர்கள் காண்பதற்காக சிறப்பு ஏற்பாடு!

டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரித்து திரைக்கதையும் அமைத்துள்ளார்.

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பிரமாண்ட அளவில் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்.கிஷோர் இயக்கிய இந்த திரைப்படம் ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த கற்பனைக் கதையாக உருவாகியிருக்கிறது.  பள்ளி கொண்டப் பெருமாள் குறித்த புராணக் கதையைக் கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மாயோன் திரைப்படம் குறித்து நடிகர் சிபிராஜ், மற்றும் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளருமான அருண்மொழி மாணிக்கம் ஆகியோர் அளித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம். 

நாளை 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாகவும் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்களும் படத்தை ரசிக்கும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ஆடியோ விளக்க பாணியிலும் திரைப்படப் பதிப்பை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.