வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட விருது வாபஸ்!! சினிமா பிரபலங்களே எதிர்ப்பு தெரிவித்ததால் அதிரடி...

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் சர்ச்சையால் அவருக்கு வழங்கப்படவிருந்த ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓ.என்.வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது.

வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட விருது வாபஸ்!! சினிமா பிரபலங்களே எதிர்ப்பு தெரிவித்ததால் அதிரடி...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்த வருடம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

இந்நிலையில் நடிகை பார்வதி, கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பதிவில், "ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது"என குறிப்பிட்டார்.

அதே போல பாடகி சினமயி, “திரு. வைரமுத்து, ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் வழங்கப்படும் ஐந்தாவது ஓ.என்.வி இலக்கிய விருதைப் பெறுகிறார். ஆஹா. மறைந்த திரு ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்.” என ட்விட்டரில் குறிப்பிருந்தார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் சர்ச்சையால் அவருக்கு வழங்கப்படவிருந்த , அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓ.என்.வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வைரமுத்துவிற்கு விருது வழங்க கூடாது என சினிமா பிரபலங்களே எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவருக்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான ஓஎன்வி விருது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. அநேகமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது வாபஸ் பெறப்படலாம் என தெரிகிறது.