பார்த்திபனின் “இரவின் நிழல்”- திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப் படத்தினுடைய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 

பார்த்திபனின் “இரவின் நிழல்”- திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கி இருந்த ஒத்த செருப்பு திரைப்படம் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று சென்றது. அத்திரைப்படத்துக்காக அவர் தேசிய விருதையும் பெற்றார்.இதையடுத்து இரவின் நிழல் திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரவில் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாக கதையம்சம் கொண்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இரவின் நிழல் படத்தினுடைய அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படத்துக்கான வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. தற்போது இப்படத்தினுடைய வெளியீடு தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. இப்படத்தை ஜூன் 24 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.