மெயின் தலைகளை மறந்து போன மக்கள்.. அடுத்த தலைமுறை தலை தூக்குகிறதா? 10 வது இடம் கூட பிடிக்கலையே..!

ஆர்மெக்ஸ் வெளியிட்டுள்ள பிரபலமான பட்டியலில் அதிர்ச்சி தகவல்..!

மெயின் தலைகளை மறந்து போன மக்கள்.. அடுத்த தலைமுறை தலை தூக்குகிறதா? 10 வது இடம் கூட பிடிக்கலையே..!

ஆர்மெக்ஸ் மீடியா:

அப்போ கடந்த மாதத்தில் நாம் சூப்பர் ஸ்டார்களாக நினைக்கும் நடிகர்கள் பற்றி மக்கள் தேடவே இல்லையா? அவர்கள் ஏன் பாப்புலாரகவில்லை என பல கேள்விகளை கேட்க வைக்கிறது ஆர்மெக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு. 

பட்டியல் வெளியீடு:

மாதந்தோறும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய நடிகர், நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு வரும் ஒரு நிறுவனம் ஆர்மெக்ஸ் மீடியா. அந்த வகையில் கடந்த மாத லிஸ்ட்டை ஆர்மெக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் நாம் சூப்பர் ஸ்டார்களாக நினைக்கக் கூடியவர்களின் பெயர்கள் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர்கள் பட்டியல்:

செப்டம்பர் மாதம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் விஜய் உள்ளார். அவரை தொடர்ந்து பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், அக்‌ஷய் குமார், சூர்யா, அஜித்குமார், சுதீப், யாஷ், ராம் சரண் ஆகியோர் 10 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 

முன்னணி நடிகர்கள் இல்லை:

இந்தப் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, நாகர்ஜூனா என டாப் ஹீரோக்களின் பெயர்கள் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அவர்களது காலம் முடிந்து அடுத்த தலைமுறை தான் நிலைக்க ஆரம்பித்திருக்கிறதா? என்ற எண்ணமும் தோன்றுகிறது. 

ஹீரோயின்கள் பட்டியல்:

அதேபோல ஆர்மெக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான பாப்புலர் ஹீரோயின்கள் பட்டியலில், சமந்தா முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

மக்கள் காத்திருக்கும் படங்கள்:

அத்தோடு ஹிந்தி படங்களில் மக்கள் அதிகம் காத்திருக்கும் படங்கள் எவை எவை என்ற பட்டியலை கடந்த 18-ம் தேதி ஆர்மெக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தில் புஷ்பா 2 படமும், அதனை தொடர்ந்து பதான், டைகர் 3, ஜவான், டுன்கி ஆகிய படங்கள் உள்ளன. 

இதையும் படிங்க: திருமணமான 3 மாதங்களில் காணாமல் போன மனைவி.. நகை, பணமும் திருட்டு..!