16 வயசு வந்த மயிலே மயிலே.. மச்சான்களுக்காக நமீதா போட்ட ஃபோட்டோ..!! 

நமீதா தனது 17 ஆவது வயதில் எடுக்கப்பட்ட இளம்வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

16 வயசு வந்த மயிலே மயிலே.. மச்சான்களுக்காக நமீதா போட்ட ஃபோட்டோ..!! 

தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் மறக்கமுடியாத நடிகை தான் நடிகை நமீதா. இவர் தமிழ், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

நமீதாவின் கவர்ச்சி மற்றும் கொஞ்சல் பேச்சுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் ‘மச்சான்ஸ் மறந்துடாதீங்க!’ என்பது இவருடைய பேமஸ் டயலாக். இருப்பினும் தன்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் ஏங்கித் தவிக்க விட்டுவிட்டு,

கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட நமீதாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

ஆனால் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நமீதா, தன்னுடைய ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தனது 17 ஆவது வயதில் எடுக்கப்பட்ட இளம்வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் நமீதா ஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக செம க்யூட்டாக காட்சியளிக்கிறார்.