'அஜித் 61' படத்தின் மாஸ் கெட்டப்பில் ஹோட்டலுக்கு சென்ற அஜித்...டிரெண்டாகி வரும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்!

அஜித் தனது மகனின் பிறந்தநாளையொட்டி ஹோட்டலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது.

'அஜித் 61' படத்தின் மாஸ் கெட்டப்பில் ஹோட்டலுக்கு சென்ற அஜித்...டிரெண்டாகி வரும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித். அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’ திரைப்படம் 150 கோடியை தாண்டி வசூலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ‘அஜித் 61’  திரைப்படத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்க இருப்பதால், சென்னை அண்ணாசாலையில் செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில், ’அஜித் 61’ படத்தின் கெட்டப்பை போனிகபூர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அஜித் நீண்ட தாடியுடன் கூடிய வில்லன் கெட்டப்பில் காட்சியளித்திருந்தார்.

இந்நிலையில் இதே கெட்டப்பில் அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளுக்காக, மனைவி, மகள் மற்றும் மகனுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் இந்த புகைப்படங்களில் இருக்கும் நிலையில் இந்தப் படங்கள் குறித்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருவதோடு, சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.