பொன்னியின் செல்வன் - ஐஸ்வர்யா ராய்யின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்-1. இத்திரைப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருக்கின்றனர். 

பொன்னியின் செல்வன் - ஐஸ்வர்யா ராய்யின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது!!
பொன்னியின் செல்வன் - நந்தினி

கல்கியின் புகழ்பெற்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன் - 1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் மட்டும் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

மேலும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் மற்றும் பிரபு, ரகுமான், பிராகாஷ் ராஜ், த்ரிஷா , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்க உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

சில தினங்களுக்கு முன்னதாக தான் வருகிறான் சோழன் என பிரம்மாண்ட வாசகத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் வீடியோ ஒன்றை வெளியிட்டது படக்குழு. 

மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டபடி போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. 

தொடர்ந்து பொன்னியின் செல்வன் - 1 குறித்த அறிவிப்புகள் வெளிவந்தபடி இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அப்போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் அப்பதிவில் பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்! என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரும் வழக்கம் போல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.