பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு : மீராமிதுன் 21-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்குகில் மீராமிதுன்- 21-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு : மீராமிதுன் 21-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் நடிகை மீராமிதுன், தனது நண்பருடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் அவர்களுக்கு சென்னை முதன்மை அமர்வு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இருவரும் நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டனர்.