வராங்க.. ரிலீஸ் டேட் சொல்ராங்க.. postponed பன்றாங்க.. Repeatu... ரசிகர்கள் புலம்பல்...

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருந்த மாநாடு திரைப்படத்தின் வெளியிடுவது தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வராங்க.. ரிலீஸ் டேட் சொல்ராங்க.. postponed பன்றாங்க.. Repeatu... ரசிகர்கள் புலம்பல்...

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை அதாவது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில், ற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,  நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு என்றும் அதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தாக தெரிவித்துள்ளார். மேலும்  தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும் படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.