ரஜினியை ஓரம் கட்டிய பிரபாஸ்...ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளமா ?

ரஜினியை ஓரம் கட்டிய பிரபாஸ்...ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளமா ?

பாகுபலி படத்தின் மூலம்  உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. பிரம்மாண்டமான பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து இவரது சம்பளம் மேலும் உயர தொடங்கியுள்ளது.

இதனைதொடர்ந்து நடித்த சாஹோ படத்தில் நடித்த பிரபாஸ் அந்தப் படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதி புருஷ் ஆகிய படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார். 

தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் பிரபாஸின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் பிரபாஸின் படங்கள் மற்ற மொழிகளிலும் வசூலை குவித்து வருகிறது.ஆதிபுருஷ், ஸ்பிரிட் படங்களுக்கு பிரபாசுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அக் ஷய்குமார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வாங்கியதாக கூறப்பட்டது.

கடந்த 10 வருடங்களாக இவர்கள் சம்பளத்தை யாரும் முந்தாத நிலையில் இப்போது பிரபாஸ் இருவரையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். மேலும் பிரபாஸைத் தேடி பல பிரம்மாண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பது இந்திய திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.