சரத்குமார் நடிக்கும் வெப் தொடரை தயாரிக்கும் பிரபல நடிகை!

சரத்குமார் முதன் முதலாக அறிமுகமாகும் வெப் தொடரை, நடிகை ராதிகா சரத்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பதாக முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

சமீப காலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்து வருகிறது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். அந்த வகையில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சரத்குமாரும் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடருக்கு ‘இரை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.கமலின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த வெப் தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பதாக,சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.