கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் ராகவா லாரன்ஸின் ”ருத்ரன்”..!

ஆக்ரோஷமான போஸில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெறிக்க விடும் ராகவா லாரன்ஸ்..!

கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் ராகவா லாரன்ஸின் ”ருத்ரன்”..!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தாலும், ராகவா லாரன்ஸின் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பேய் படங்களுக்கு ஃபேமஸான ராகவா லாரன்ஸ்க்கு பெண்கள் ஃபேன் பேஜ் மிகவும் அதிகம். இவரது காஞ்சனா வரிசை படங்கள் தியேட்டரில் வசூலை வாரி குவித்தன. கடைசியாக வெளியான காஞ்சனா 3, விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூலை குவிக்க தவறவில்லை. இந்தப் படத்திற்கு பிறகு சிறிது காலம் லாரன்சின் எவ்வித படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகத நிலையில், தற்போது அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. 

டிசம்பர் 23-ல் ருத்ரன்..

அந்த வகையில், ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு அசத்தியுள்ளார். திருவிழா ராட்டினங்கள் சுற்ற, அங்கு எதிரிகளை பந்தாடுவது போன்று ஆக்ரோஷத்தில் நிற்கிறார் ராகவா லாரன்ஸ் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில். அதேபோல மற்றொரு போஸ்டரில் கையில் மது பாட்டிலுடன் முறைத்து பார்த்தப்படி அமர்ந்துள்ளார். அப்படியெனில் படத்தில் ஆக்‌ஷனுக்கு எவ்வித குறைவும் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.