நீட் தேர்வை எதிர்க்கும் மாணவர்கள் பக்கம் நான் இருப்பேன்- பிரபல நடிகை ஓபன் டாக்…  

 நீட் தேர்வை எதிர்க்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சனைகளை உணவர்வதால் தான் எப்போது மாணவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவ படிப்பு படித்துள்ள நடிகை சாய் பல்லவி அண்மையில் நீட் தேர்வு குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது அவர், தனது குடும்பத்திலும் நீட் தற்கொலை நடந்துள்ளது என்ற அவர், மதிப்பெண் குறைந்து விட்டதால் தனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று வேதனை தெரிவித்தார். எனினும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் அவரது இழப்பை தங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று தன்னால் எளிதில் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் என்ற அவர், நீட் தேர்வை எதிர்க்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சனைகளை உணவர்வதால் தான் எப்போது மாணவர்கள் பக்கம் தான் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.