வாடகை தாயாக மிரட்டியுள்ள சமந்தா.. சரியான நேரத்தில் வெளியாகவிருக்கும் யஷோதா திரைப்படம்..!

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள யஷோதா படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல்..!

வாடகை தாயாக மிரட்டியுள்ள சமந்தா.. சரியான நேரத்தில் வெளியாகவிருக்கும் யஷோதா திரைப்படம்..!

யஷோதா:

சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் யஷோதா. சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், 
உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். 

ஒன்றரை வருடம் கிடப்பில்:

இயக்குநர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வரும் 11-ம் தேதி 
திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கிடப்பில் கிடந்த திரைப்படம் யஷோதா. 

முன்னணி கதாபாத்திரத்தில்:

நயன்தாராவை போன்று கதையின் முன்னணி கதாபாத்திரங்களில் ஜொலிக்கத் துவங்கியிருக்கிறார் சமந்தா. இதற்கு முன்னதாக அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான யூ டர்ன், ஓ பேபி போன்ற படங்கள் விமர்சன 
ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தது. 

வாடகைத் தாய்:

அந்த வகையில், மீண்டும் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷோ படத்தின் டிரைலர் வெளியானது. நடிகர் சூர்யா யஷோதா படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார். வாடகைத் தாய்களை வைத்து சமுதாயத்தில் நடக்கும் அரசியலையும், மர்மங்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக யஷோதா இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே தெரியவருகிறது. 

தலைத்தூக்கும் பிரச்னை:

ஏற்கனவே இந்த வாடகைத் தாய் பிரச்னை தமிழ்நாட்டில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தது, சென்னையில் தனியார் மருத்துவமனையில் வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் பணத்திற்காக வாடகை தாய்களாக இருந்தது போன்ற பல பிரச்னைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த மாதம் 11-ம் தேதி ரிலீஸ்:

இந்த நேரத்தில் வாடகைத் தாய்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள யஷோதா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தமாதம் 11-ம் தேதி படம் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.