தொடரும் சதீஷ் சர்ச்சை... முற்றுப்புள்ளியாய் வெளியான வீடியோ...

நடிகர் சதீஷ் மேடையில், ஆடைகள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தனது தரப்பு கருத்துகளை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் சதீஷ்.

தொடரும் சதீஷ் சர்ச்சை... முற்றுப்புள்ளியாய் வெளியான வீடியோ...

சன்னி லியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தின் சமீபத்திய நிகழ்ச்சியில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதில், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, காமெடி நடிகர் சதீஷ், மற்றும் தர்ஷா குப்தா ஆகியொரும் கலந்து கொண்ட நிலையில், மேடையில் சதீஷ் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | வெளியானது விஜய் சேதுபதியின் 6வது படம் ஃபர்ஸ்ட் லுக்... "DSP"...

“பாலிவுட்” டில் இருந்து வந்த நடிகை சன்னி லியோனியே, நமது கலாச்சார உடையான “பட்டுப் புடவை” அணிந்து வந்திருக்கிறார். ஆனால், கோவையில் இருந்து வந்த நமது தமிழ் பெண், எந்த ஆடை அணிந்திருக்கிறார் பாருங்கள்! என, தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து ஒரு கேலி செய்திருந்தார்.

நகைச்சுவையாக இருந்தாலும், மேடையில் அவ்வளவு பேர் முன்னிலையில் ஒரு பெண்ணின் ஆடை குறித்து சதீஷ் பேசியதால், இந்த கருத்து பெரும் சர்ச்சை ஆனது.

மேலும் படிக்க | இன்ஸ்டாவில் டிரெண்டாகி வரும் ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்”...

குறிப்பாக, பெண்ணியவாதியான, பாடகி சின்மயி, மூடர் கூடம் பட இயக்குனர் நவீன், பாடகர் ஸ்ரீநிவாஸ், டாக்டர் ஷர்மிளா உட்பட பல திரைப்பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்த நிலையில், அந்த கருத்துகளுக்கு தனது தரப்பு விளக்கங்களை அளித்திருக்கிறார் நடிகர் சதீஷ்.

தனது தோழியான தர்ஷா குப்தா தன்னிடம் இது குறித்து மேடையில் பேசுமாறு தானே வலியுறுத்தியதாக கூறிய சதீஷ், தான் மோசமானவன் அல்ல, அது வெறும் நண்பர்களுக்கு இடையான் ஔரையாடல் மேடைக்கு வந்தது என விளக்கம் அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | விரைவில் உருவாக உள்ளது 'தி வாக்சின் வார்' ..... 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ' இயக்குனரின் அடுத்த படைப்பு...!