படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு தீவிரம்...!!

படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு தீவிரம்...!!

கேரள படகு விபத்து எதிரொலியாக கன்னியாகுமரி நடுகடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று கடலில் படகு சவாரி மேற்கொண்ட போது படகு விபத்தில் சிக்கி இருபதுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அதன் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.

விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, அறிவுரைகள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது எனவும், படையில் நின்று பயணம் செய்ய கூடாது எனவும் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் வரை பாதுகாப்பு கவசங்களை கழட்டக்கூடாது எனவும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?