லாக்டவுனில் லாக் போட்டு செம குத்து குத்திய ஷிவானி...வைரல் வீடியோ

ஷிவானி நாராயணன் தாவணியில் டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லாக்டவுனில் லாக் போட்டு செம குத்து குத்திய ஷிவானி...வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி தான் இருக்கிறார்கள். ஷிவானியும் தனது வீட்டில் தான் நேரத்தை செலவழித்து வருகிறார்.

அவ்வப்போது வீட்டில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ஷிவானி நாராயணன் 

செம்ம ஆட்டம் போட்ட நடிகை ஷிவானி நாராயணனின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

லாக்டவுனில் ரொம்ப போர் அடிக்குது... சரி நாமளும் ஒரு ரீல்ஸ் வீடியோ போடுவோம் என்ற கேப்ஷனுடன் தாம் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அழகிய பாவாடை தாவணியில் காட்சியளிக்கும் ஷிவானி, குத்து பாட்டு, ரொமான்டிக் பாடல் ஆகிய இரண்டும் கலந்திருக்கும் ரீமிக்ஸ் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்க ரீல்ஸ் வீடியோவுக்காக தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.