தாஜ்மஹாலுக்கு ஜோடியுடன் சென்ற சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் சில புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வட்டமடித்து வருகிறது.

தாஜ்மஹாலுக்கு ஜோடியுடன் சென்ற சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடப்பில் அடுத்து உருவாகி வரும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சி.பி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆவார்.

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். 

கொரோனா காரணமாக தள்ளிபோன இந்த படத்தின் ஷீட்டிங் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஆக்ராவில் நடைபெற்று வருகிறது.

அங்கு தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது. இது குறித்த சில புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.