ரசிகர்களோடு தனது படத்தை பார்த்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன்.. படம் சிறப்பாக வந்துள்ளதாக பேட்டி..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது..!

ரசிகர்களோடு தனது படத்தை பார்த்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன்.. படம் சிறப்பாக வந்துள்ளதாக பேட்டி..!

பிரின்ஸ்:

டாக்டர், டான் பட வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ் உட்பட பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. 

முதல் காட்சி:

முதன்முறையாக சிவகார்த்திகேயனின் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில், சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசும் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. 

ரசிகர்களோடு சிவா:

தமிழ்நாடு முழுவதும் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், முதல் காட்சியை சென்னை ரோகிணி தியேட்டரில் தனது ரசிகர்களுடன் கண்டு களித்தார் சிவகார்த்திகேயன். 

மகிழ்ச்சி:

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைப்படம் மிக சிறப்பாக வந்துள்ளதாகவும், ரசிகர்களுடன் படம் பார்த்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.