சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் தான் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர்  ஹிட்டானது. இதையடுத்து 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்ததோடு மட்டுமில்லாமல் இசையமைத்தும் உள்ளார்.

ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், ’சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.