சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து  : நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் !!

சர்ச்சை கருத்து விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து  : நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் !!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் சார்பில் தமிழக டி.ஜி.பி-க்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கிடையே டுவிட்டரில் பதிவிட்ட கருத்தை சித்தார்த் நீக்கி அதற்காக மன்னிப்பும் கோரினார். எனினும் சாய்னா நேவால் குறித்து அவதூறு பரப்பியதாக சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.