கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்ற சூர்யா - ஜோதிகா... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சூர்யா - ஜோதிகா குடும்பத்துடன் கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்ற சூர்யா - ஜோதிகா... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் சூர்யா, சமீபத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பதில் மட்டுமின்றி அவ்வப்போது குடும்பத்தினருடனும் நேரம் செலவழிப்பார். அப்படி தான் தற்போது நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா தங்களது குழந்தைகளுடன் கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இந்த சுற்றுலா குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூர்யா ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அங்குள்ள அருவியில் குளிப்பது போன்றும், ரோப் கயிற்றில் தொங்கிக் கொண்டு த்ரில் பயணம் செய்வது போன்றும், பல்வேறு விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் சூர்யா - ஜோதிகா இருவரும் ரப்பர் படகுகளில் தங்கள் பசங்களை வைத்துக்கொண்டு ரொம்ப ஜாலியாக ஓட்டுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த சுற்றுலா குறித்த அனைத்து புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.