காஜல் அகர்வால் கர்ப்பம்...  இந்தியன் 2வில் நுழைந்த தமன்னா!!

காஜல் அகர்வால் கல்யாணமாகி கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் தற்போது அவர் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 காஜல் அகர்வால் கர்ப்பம்...  இந்தியன் 2வில் நுழைந்த தமன்னா!!

கமல் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  வெளி வந்த  இந்தியன் படத்தில் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா தொற்று முதல் அலை, படப்பிடிப்பில் நடந்த விபத்து என படப்பிடிப்பு தாமதமானது . இதனால் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க போய்விட்டார், ஷங்கரும் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தயாரானார்.

ஆனால் தயாரிப்பாளரே இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு பட வேலைகளில் ஷங்கர் ஈடுபட வேண்டும் என்று லைகா நிறுவனம் கோர்ட்டுக்கு போனது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் இந்தியன்-2 படத்தை இயக்க ஷங்கர் ஒப்புக்கொண்டார். ஆனால் ராம் சரண் நடிக்கும் படத்தை முடித்ததும் அடுத்த 2022ல் தான் ஆண்டில் இந்தியன்-2 படத்தை தொடர்வார் என்று தெரிகிறது.

 
இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்திருந்த நிலையில் அவருக்கு கல்யாணமாகி கர்ப்பமாக இருப்பதால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் தற்போது அவர் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் கடைசியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் நடித்த தமன்னா, இப்போது இந்தியன் 2 படத்தில் இணையவுள்ளார்.