அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி..!!

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் கார்த்தி கூறியுள்ளார்.

அண்ணன் சூர்யாவுக்கு நன்றி சொன்ன தம்பி கார்த்தி..!!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தின் படபிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் தொடங்கி 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்ததுள்ளது.

இதை பற்றி கார்த்தி கூறுகையில் “மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை இயக்குநர் முத்தையா நடத்தி உள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, எதார்த்தமானவர் என்று கூறிருந்தார்.

மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம் எனவும் 2D நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி எனவும் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.