தலைவி படத்திற்கு யூ சான்றிதழை வழங்கிய தணிக்கைக்குழு.. !

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் உருவாகியுள்ள தலைவி படத்திற்கு யூ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கைக்குழு.

தலைவி படத்திற்கு யூ சான்றிதழை வழங்கிய தணிக்கைக்குழு.. !

ஏ.எல். விஜய்தான் இயக்கத்தில் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் உருவாகியுள்ளது தலை வி படம்.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. கங்கனா ரனாவத்  ஜெயலலிதாவாவும், அர விந்த்சாமி இதில் எம்ஜிஆராக நடித்துள்ளார்.

தலை வி படத்துக்கான ஆரம்பக்கட்ட புகைப்படங்கள், தகவல் சேகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டவர் அஜயன் பாலா. பிறகு விஜயேந்திர பிரசாத் முதற்கொண்டு பலரும் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தினர். தமிழ் பதிப்புக்கு மதன் கார்க்கியும், இந்திக்கு ரஜத் அரோராவும் வசனம் எழுதியுள்ளனர். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங், பிருந்தா பிரசாத் ஆகியோர் தலை வியை தயாரித்துள்ளனர். ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிரமாண்டமாக தயாராகியிருக்கும் தலை வியை திரையரங்கில் வெளியிடுவதாக இருந்த நேரம் தான் கொரோனா இரண்டாம் அலையில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படம் ஓடிடியில் வெளியாகும் என்றனர். தயாரிப்பாளர்கள் அதனை மறுத்தனர். சுமார் 100 கோடிகள் படத்துக்கு செல விடப்பட்டுள்ளதால், திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் திரையரங்கில் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழை சென்சார் போர்ட் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்டில் படத்தை வெளியிடும் வேலையை முடுக்கி விட்டுள்ளனர்.