ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு - இணையத்தை கலக்கும் ருத்ரன்!!

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி இருக்கும் ருத்ரன் திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு - இணையத்தை கலக்கும் ருத்ரன்!!

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்துக்கான சண்டை காட்சிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  

இதனை அடுத்து இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் அதன்படி படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்துக்கான போஸ்டர் வெளியானது முதல் தற்போது வரை இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.