இனி இப்படித்தான் அழைக்கப்போகிறேன்' - ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த இயக்குநர்

இனி இப்படித்தான் அழைக்கப்போகிறேன்' - ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த இயக்குநர்

ஜி.வி.பிரகாஷ் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'இடி முழக்கம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இடி முழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னைக்கு வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இயக்குநர் சீனு ராமசாமி, ஆணவம் இல்லாத அறிவு, தாய்மொழிப்பற்று, தன்னை ஒப்புவித்து ஒத்துழைத்த கலை எளிமை, இசையோடு கூடிய தமிழறிவு. என் கலை மீதான அன்பு இவையெல்லாம் உங்கள் பக்கம் எனை ஈர்த்தது. வெற்றித் தமிழன் என்றே உங்களை அழைக்கப்போகிறேன். துணை வரட்டும் என் தாய் மீனாட்சி. வாழ்த்துகள் தம்பி'' என்று குறிப்பிட்டுள்ளார்.