”நானே வருவேன்” படத்தின் தேதியை மாற்றிய படக்குழு.. ஆனால் போட்டி போட்டி தான்..!

நிச்சயம் படம் த்ரில்லர் படமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் தகவல்..!

”நானே வருவேன்” படத்தின் தேதியை மாற்றிய படக்குழு.. ஆனால் போட்டி போட்டி தான்..!

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதற்கு தயாராக இருந்து வரும் நிலையில், 30-தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நானே வருவேன் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது படக்குழு

தனுஷ்:

கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று சுழன்று சுழன்று நடித்து வரும் தனுஷிற்கு, தமிழிலில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற தொடர் தோல்விகளாக அமைந்தது. அவற்றை எல்லாம் சரி செய்யும் விதமாக கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

நானே வருவேன்:

நீண்ட வருடத்திற்கு பிறகு மீண்டும் தனது அண்ணனும், இயக்குநருமான செல்வராகவனோடு கைக்கோர்த்தார் தனுஷ். நானே வருவேன் எனப் பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் படம் பற்றின அறிவிப்பு வெளியாகாமல் கிடப்பிலேயே கிடந்தது. 

அப்டேட்:

இதனையடுத்து படத்திலிருந்து ஒரு ஒரு அப்டேட்டாக வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க ஆரம்பித்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. காரணம் முதன் முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் அதுவும் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்க இருப்பதாக அந்த போஸ்டர் கூறியது. 

டீசர்:

அத்தோடு இல்லாது கடந்த 15-ம் தேதி வெளியான படத்தின் டீசர் சற்று வித்தியாசமாக படம் நிச்சயம் ஒரு த்ரில்லர் கதையம்சமாகத் தான் இருக்கும் என்பதை காட்டியது. சாந்தமான ஒரு தனுஷும், ஆக்ரோஷமான ஒரு தனுஷும் எதற்காக மோதிக்கொள்கிறார்கள்? இதில் செல்வராகவன் எங்கிருந்து வந்தார் எதற்காக வந்தார்? அவர் இந்தப் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பேராவல் ஏற்பட்டுள்ளது. 

ரிலீஸ் தேதி:

டீசர் படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 30-ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படம் போட்டியிடும் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது நானே வருவேன் திரைப்படம் 29-ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.