சிங்கம் வேஷத்தில் மேளதாளத்துடன் வெளியான போஸ்டர்... சிம்பு மூவியின் லேட்டஸ்ட் அப்டேட்

சிங்கம் வேஷத்தில் மேளதாளத்துடன் வெளியான போஸ்டர்... சிம்பு மூவியின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் சிம்பு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

அந்த வரிசையில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் உடன் சிம்பு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல, கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 48வது படமாக உருவாக உள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் அவர்கள் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளது.