இன்று மாலை வெளியாகிறது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்..!!

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணி வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்று மாலை வெளியாகிறது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்..!!

நேர்கொண்ட பார்வையை அடுத்து அஜித் - வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

வலிமை படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. 

இதற்கிடையே எந்தவித அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சினிமா வட்டாரங்கள் இதைத் தெரிவிப்பதால் இன்று மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.