நடிகர் யாஷ் மனைவிக்கு கொடுத்த ஆசை முத்தம்..! புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராதிகா பண்டிட்!!

நடிகர் யாஷ் தனது மனைவிக்கு ஆசையாய் முத்தம் கொடுத்த புகைப்படத்தை அவரது மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் யாஷ் மனைவிக்கு கொடுத்த ஆசை முத்தம்..! புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராதிகா பண்டிட்!!

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதியன்று கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் வாயிலாகவும் பிரம்மாண்ட வெற்றியினை ஈட்டியது. இந்த படம் உலகம் முழுவதும் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, 1000 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை நடிகர் யாஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.

 

இந்நிலையில் அந்த வெற்றி கொண்டாட்டத்தின் மற்றொரு பகுதியாக நடிகர் யாஷ் தந்து மனைவிக்கு ஆசையாய் முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தற்போது யாஷ் மனைவி ராதிகா பண்டிட் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கே.ஜி.எப் 2 படத்தின் வெற்றிக்கொண்டாத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.