”அவதார் 2” வின் மாஸ் அப்டேட்! 160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது!! ஷாக்கான ரசிகர்கள்

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட்டான “அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவித்திருக்கின்றனர்.

”அவதார் 2” வின் மாஸ் அப்டேட்! 160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது!! ஷாக்கான ரசிகர்கள்

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவதார்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் உலக சாதனை படைத்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவதார் 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த நிலையில், வருகின்ற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது இந்தியாவில் தமிழ் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்பட பல வட இந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது.

இப்படி 160 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்னர் வெளியான ‘அவதார்’ முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் 2850 மில்லியன் டாலர் வசூல் செய்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ள ’அவதார் 2’  முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.