கார்த்தியின் ’சர்தார்’ படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்..!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்...!

கார்த்தியின் ’சர்தார்’ படத்தின் தியேட்டர்  ரிலீஸ் உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்..!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் 'சர்தார்'. இந்த படத்தை எஸ்.லக்ஷ்மன் குமார், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார். மேலும், ராஷிகண்ணா, ரஜீஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

 இதுவரை கார்த்தி நடித்த படங்களில் தற்போது எடுக்கப்பட்டு வரும் சர்தார் திரைப்படம் தான் அதிக பொருட் செலவை கொண்டு உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைப்பெற்றது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது.

குறிப்பாக இதுவரையிலும் படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோன்று சர்தார் திரைப்படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.