வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்..! ஒய்யாரமாக நடைபோடும் விஜய்..!

அத்துமீறின செயல்கள் வருத்தமளிப்பதாக தயாரிப்பாளர்கள் வருத்தம்..!

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்..! ஒய்யாரமாக நடைபோடும் விஜய்..!

விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து வெளியான படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

வாரிசு: விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. முதன் முதலாக விஜய் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியானது. சும்மா கெத்தாக, ஸ்டைலாக ஒரு கோட் சூட்டில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் படியாக அந்த புகைப்படம் இருந்தது.

படப்பிடிப்பு வீடியோ: ஏற்கனவே சென்னையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட 8 வினாடி வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் ஒரு கட்டடத்தில் விஜய் ஸ்டைலாக நடந்து வருவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

படக்குழு அதிருப்தி: இப்படி படம் வெளியாவதற்கு முன்பே படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் சூட்டிங் நடத்தினால் இப்படி பல பிரச்னைகள் வரும் என்பதாலே பிலிம் சிட்டிகளில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு சூட்டிங் நடக்கிறது. அப்படி இருந்தும், யாரேனும் இப்படி அத்துமீறின செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது என்கின்றனர் தயாரிப்பாளர் வட்டாரத்தினர்.