அவர் தான் விட்டுட்டு போயிட்டதா இவங்க சொல்றாங்க.. சேர்ந்து வாழ தான் ஆசப்படுறேன் அவரு சொல்றாரு.. எது உண்மை?

ஆண் நண்பருடன் சேர்ந்து திவ்யா கருவை கலைக்க திட்டமிடுவதாக அர்ணவ் குற்றச்சாட்டு..!

அவர் தான் விட்டுட்டு போயிட்டதா இவங்க சொல்றாங்க.. சேர்ந்து வாழ தான் ஆசப்படுறேன் அவரு சொல்றாரு.. எது உண்மை?

6 வருடங்களாக காதல்:

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யாவும் தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்தாண்டு ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்துள்ளனர். 

கர்ப்பிணியை தாக்கிய நடிகர்:

3 மாதங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கருவுற்றுள்ளார். நடிகை திவ்யாவை அரணவ் தாக்கியதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் அரணவ் ஆவடி காவல் ஆணையகரத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

நாடகம் நடத்துகிறார் திவ்யா:

அதில் தனது மனைவி அவரது ஆண் நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து கருவை கலைக்க நாடகம் நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அரணவ் விசாரணைக்காக நேரில் ஆஜராகினார்.

மாறி மாறி காவல்நிலையத்தில் புகார்:

இதேபோல், நடிகை திவ்யா தனது கணவர் அரணவ் தன்னை தாக்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அரணவ் உடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், ஆனால் அதற்கான அத்தனை வழிகளையும் அவர் அடைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.