தியாகராஜன் குமாரராஜாவின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ...

தியாகராஜன் குமாரராஜாவின் 3 வது படம் அறிவியல் திரில்லர் படமாக  உருவாகிறது!

தியாகராஜன் குமாரராஜாவின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ...

 தமிழ்த்திரையுலகில் கடந்த 2011ல் வெளியான ஆரண்ய காண்டம்  படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் தியாகராஜன் குமாரராஜா. இவரது முதல்படமே, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது.

இதையடுத்து இவ்ருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமாக,விஜய்சேதுபதி, சமந்தாஉள்ளிட்டவர்களின்  நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது.

இப்படமும்  பல விருதுகளை குவித்தது. குறிப்பாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து தேசிய விருதை வென்றார்.இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜாவின் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

'சைன்ஸ் பிக்ஷன்' கதைகளமாக உருவாகவுள்ள இப்பட த்தின்  கதை மற்றும் திரைக்கதை எழுதும் பணிகள் முடிந்து அதை மெருகேற்றும் வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து விரைவில்  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.