வெளியான ”துணிவு” 2-ன்ட் லுக்.. பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையே..!

வழக்கத்திற்கு மாறாக வெளியாகும் அப்டேட்கள்.. வலிமை மாறி ஆகிடுமோ என ரசிகர்கள் அச்சம்..!

வெளியான ”துணிவு” 2-ன்ட் லுக்.. பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையே..!

வலிமை:

வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை பார்த்து அஜித்தை கொண்டாடிய ரசிகர்களால் வலிமை படத்தை பார்த்து கொண்டாட முடியவில்லை. 

3-வது முறை கூட்டணி:

நேர்கொண்டபார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச்.வினோத், போனிகபூர், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் அஜித்தின் 61-வது படம் மூலம் இணைந்தது. வலிமை படத்தில் ஏற்பட்ட பின்னடைவை எப்படியேனும் சரி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படக்குழு தீயாய் தயாராகி வருகிறது. 

மீண்டும் நெகட்டிவ் ஷேடோவில் அஜித்:

வலிமை படம் வெளியாவதற்கு முன்பே அஜித்தின் 61-வது படம் பற்றின அறிவிப்பை இயக்குநரும், தயாரிப்பாளரும் மாறி மாறி வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதில், அஜித் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் நெகட்டிவ் ஷேடோவில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

அஜித் 61 லுக்:

பொதுவாக அஜித் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அவரது லுக் எப்படி இருக்கும் என்ற எதிபார்ப்பு 
ரசிகர்களிடம் இருக்கும். அதிலும் இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடோ வேறு சொல்லவா வேண்டும். படக்குழுவினரே இவரது லுக் இப்படி தான் இருக்கும் என இமேஜை வெளியிட்டது. அத்தோடு அடிக்கடி ஆங்காங்கே படக்குழுவுக்காக செல்லும் போது, பைக் ரைடிங் செல்லும் போதும் பலரது கேமராவில் சிக்கினார் அஜித். அவரது புகைப்படங்கள் தாறுமாறாக சமூக வலைதலங்களில் வைரலானது. 

தாமதமான படப்பிடிப்பு:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானது. அஜித்தின் உடல் தோற்றத்திற்காகவும், 
க்ளைமேக்ஸில் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும் படப்பிடிப்பு கொஞ்ச காலம் தள்ளிப்போனதாக கூறப்பட்டது. 

தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும்:

எவ்வித பெரிய அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது. அதன் படி அஜித்தின் 61-வது படத்திற்கு துணிவு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்து பழகிப் போன அதே சால்ட் லுக்குடன் அஜித், கையில் துப்பாக்கியை ஏந்தியப் படி போஸ் கொடுத்திருந்தார்.

இரண்டாவது லுக்:

விஜய் படங்கள் போன்று படத்திலிருந்து 3 போஸ்டர்கள் வெளியாகும் என கூறப்பட்டதை உறுதிபடுத்தும் விதமாக ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, துணிவு படத்தின் 2-ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிலும், அஜித் அதே சால்ட் லுக்குடன் கோபத்தில் உள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரில் இருந்த NO GUTS NO GLORY என்ற வாசகம் இந்த போஸ்டர்லும் இடம் பெற்றுள்ளது. 

வழக்கத்திற்கு மாறாக:

பொதுவாக அஜித் படங்களில் இருந்து இதுபோன்று அடுத்தடுத்து அப்டேட்கள் எதுவுமே வெளியாகாது. படத்தின் பெயரோடு கூடிய படத்தின் பூஜை மட்டுமே வெளியாகும். அதன்பிறகு நேரடியாக தியேட்டரில் மட்டுமே படத்தை காண முடியும். அவரது தோற்றத்தையும் காண முடியும். அதனால் ரசிகர்களுக்கு மிகுந்த ஆவல் ஏற்பட்டது. ஆனால் 
வலிமை படத்தை போன்று இந்தப் படத்திற்கும் அனைத்து விதமான அப்டேட்களும் வெளியாகிக் கொண்டு இருப்பதால், வலிமை படம் போன்றே இந்தப் படமும் விமர்சனம் செய்யப்படுமா என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவிருப்பதால், நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.