நடிகர் சூர்யாவோட நேரடியா போட்டியிடும் டொவினோ தாமஸ்.. ஓ ஜெய்பீம் படத்துக்கு போட்டி மின்னல் முரளியா?

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்தோடு போட்டியிடுகிறது மின்னல் முரளி..!

நடிகர் சூர்யாவோட நேரடியா போட்டியிடும் டொவினோ தாமஸ்.. ஓ ஜெய்பீம் படத்துக்கு போட்டி மின்னல் முரளியா?

மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் படத்தோடு நேருக்கு நேர் மோதவுள்ளது மின்னல் முரளி திரைப்படம். 

ஜெய்பீம்: கடந்தாண்டு இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. தஜெ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன் உட்பட பலர் நடித்திருந்தனர். 1993-ம் ஆண்டு குறவர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரின் லாக் அப் டெத் நிகழ்வை தழுவி எடுக்கப்பட்டது ஜெய்பீம். 

சர்ச்சை: படம் வெளியான 8-வது நாளில் வெடித்தது சர்ச்சை. அதாவது படத்தில் வில்லனாக தோன்றும் நபரின் பெயர் மற்றும் அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் தங்கள் அமைப்பின் சின்னம் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் பலரும் படத்திற்கு எதிராக கருத்துகளை கூற ஆரம்பித்தனர். இந்த சர்ச்சை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடும் அளவிற்கு சென்றது. 

விருதுகளை குவித்த ஜெய்பீம்: என்னதான் ஒரு புறம் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட, மறுபுறம் விருதுகளை குவிக்க தவரவில்லை ஜெய்பீம். சர்வதேச அளவில் கோல்டன் விருதுகள் முதல் ஆஸ்கர் வரை படம் சென்றது. ஆனால் விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் படம் இடம்பெற்றது. ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றாலும் கூட பெய்ஜிங்கில் நடைபெற்ற 12-வது சர்வதேச விழாவில் 'டியாண்டன்' என்ற விருதை பெற்றது ஜெய்பீம். 

மெல்போர்ன் சர்வதேச திரைப்படவிழா: இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இம்மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் பல படங்கள் போட்டியிடவுள்ளன. 

3 பிரிவுகளில் போட்டியிடும் ஜெய்பீம்: இந்த விழாவில், 'சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை' ஆகிய பிரிவுகளின் கீழ் களமிறங்குகிறது 'ஜெய்பீம்' திரைப்படம். சிறந்த நடிகர் போட்டியில் சூர்யாவும், சிறந்த நடிகை போட்டியில் லிஜிமோல் ஜோஸ்ஸும் ரேஸில் உள்ளனர். 

ஜெய்பீம் vs மின்னல் முரளி: இந்த நிலையில், ஜெய்பீம் படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் வெளியான 'மின்னல் முரளி' திரைப்படமும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த படத்திற்கான பிரிவிலும், சிறந்த நடிகருக்கான பிரிவிலும் ஜெய்பீமோடு மோதவுள்ளது மின்னல் முரளி. அதன்படி சூர்யாவுக்கு போட்டியாக மின்னல் முரளி கதாநாயகர் டொவினோ தாமஸ் களமிறங்குகிறார். 

மின்னல் முரளி: கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான பெஸ்ட் எண்டர்டெயிண்ட்மெண்ட் திரைப்படம் 'மின்னல் முரளி'. டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்டதாக வெளியானது. தென்னிந்திய மொழிகளில் ஒரு சூப்பர் ஹீரோ கதை என்பது சற்று வித்தியாசமானது. அப்படி ஒரே திரைப்படத்தில் ஒரே மாதிரியான சக்தி கொண்ட நல்ல சூப்பர் ஹீரோவும், கெட்ட சூப்பர் ஹீரோவும் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர் மோதுவதாக கதைக் களத்தை கொண்டிருந்தது மின்னல் முரளி திரைப்படம். 


பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26-ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சர்ச்சை பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே, இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். இது குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர்.  இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜார்:

இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்ற போது,  கனல் கண்ணன் ஆதரவாளர்கள் வாகனத்தை வழி மறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஜாமீன் கேட்டு  மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நாளை மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

அது மட்டும் வேணாம்..சிம்பு சொன்ன நோ.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பத்துதல, வெந்து தணிந்தது காடு படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு..!

பிசியாகவுள்ள சிம்பு: நடிகர் சிம்பு தற்போது பத்துதல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ஹன்சிகாவின் மஹா படத்திலும் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. 

மதுபான விளம்பரமும் சிம்புவின் பதிலும்: இந்த நிலையில், நடிகர் சிம்புவிடம் பிரபல மதுபான நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரப் படங்களில் நடிக்குமாறு அணுகியுள்ளது. ஆனால் இதற்கு சிம்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

 

உடல் ஆரோக்கியம் முக்கியம்: கடந்த ஒன்றைரை வருடங்களாக சிம்பு தனது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் ஈடுபட்டிருந்தார். உடல் பயிற்சி, யோகா, நடனம் என பல வழிகளில் கடுமையாக உழைத்து தற்போது ஒரு சிறுவன் வயதுக்கு வந்துள்ளார் சிம்பு. இந்த நேரத்தில் மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மதுபான விளம்பரத்தில் தான் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு நாள் முதல்வனின் 60வது பிறந்தநாள் இன்று!

நாட்டுப் பற்றுக் கொண்ட இந்திய நடிகர்களில் முதன்மை வகிக்கும் அர்ஜுன் சார்ஜாவின் 60 வது பிறந்தநாள் இன்று!

நாட்டுப் பற்று நிறைந்தவர்கள் பலர். ஆனால், அனைவரது மனதில் எடுத்துக் காட்டாக நிலைத்து நிற்கும் பற்றாளர் ஒரு சிலரே. அந்த வகையில், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு நடிகர் யார் என்றால்ம் அது அர்ஜுன் தான். அவரது தேசப்பற்று எந்தளவு என்று கேட்டால், இந்தியா சுதந்திரம் அடைந்த அதே நாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் என்றால் பாருங்கள்.

இது வரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அர்ஜுன் படங்களில், வழக்கமான ஹீரோக்களுக்கு தேவையான காதல், குடும்ப செண்டிமெண்ட் போன்றவை தாண்டி, மக்கள் நலம், தேசப்பற்று ஆகியவையும் நிரைந்திருக்கும். ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் அர்ஜுன், முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு காலெடுத்து வைத்தது ‘நன்றி’ என்ற படம் மூலமாகத் தான்.

கன்னடத்தில் இருந்து வந்த இவரது தமிழ் வித்தியாசமாக இருந்தாலும், பலரால் ரசிக்கப்பட்டது. அவரது உடலமைப்பு, உடல்கட்டு அனைத்தும் பலரால் ரசிக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அவர் ரசிகர்களை குவித்தது, தேசப்பற்று படங்கள் மூலமாகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம், தான் ஒரு கமெசியல் ஹீரோ தான் என நிரூபித்தார். தொடர்ந்து பல படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவாகக் கொடுத்து, இந்திய அளவில் பார்வைப் பெற்றது, அதே ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘முதல்வன்’ படம் தான். ஒரு நாள் முதல்வன் என்ற கதைகளம், மிகவும் வித்தியாசமாக பலராலும் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் கூட்டம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

1981இல் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அர்ஜுன், தனது தேசப்பற்றை, சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கையில், தேசியக்கொடியை பச்சைக் குத்தியிருக்கிறார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.  இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

2023இல் திரையரங்குகளைத் தெரிக்க விட வருகிறது ‘சலார்’!!!

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படமானது, வருகிற 2023ம் ஆண்டு திரையரங்குகளுக்கு வருவதாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய படங்களுக்கான ஒரு முகப்பாக அமைந்த ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அக்குழு அப்படியே இணைந்து உருவாக்கும் புதிய படம் தான் சலார்.

2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான வெற்றித் திரைப்படம் தான் ‘கே.ஜி.எஃப்’. பிரஷாந்த் நீல் இயக்கி, விஜய் கிரகண்டூரின் ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியானது. அந்த படம் பல நூறு கோடி ஐந்து மொழிகளில் செய்ததோடு, மாபெரும் வசூல் சாதனையும் செய்தது.

இந்நிலையில், படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக இருப்பதாக திடீரென வந்த அப்டேட், அனைத்து சினிமா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, மாபெரும் வரவேற்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து, படத்தில் ஒரு கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும், நல்ல வரவேற்புப் பெற்றது. அது தான் சலார்!

அந்த கதாபாத்திரத்திற்கென்று தற்போது ஒஎரு தனி ‘Spin Off' உருவாக இருப்பதாகவும், அந்த கதையின் நாயகனாக, பிரபல பான் இந்தியா நட்சத்திரமான பாகுபலி பிரபாஸ் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பெரும் வரவேற்பு மக்களிடையே வெளியானது. இதனைத் தொடர்ந்து, tஹற்போது, சலார் படம், வருகிற செப்டம்பர் 28ம் தேதி, 2023ம் ஆண்டு வெளியாகவுள்ளதாக, ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த படத்தில், கே.ஜி.எஃப் குழுவுடன், பிரித்விராஜ், ஷ்ருதிஹாசன், ஜகபதிபாபு, சிரியா ரெட்டி, ஆகியோரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட, இந்து முன்னணி நிர்வாகியும், பிரபல சண்டைப்பயிற்சியாளருமான கனல்கண்ணன் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்:

இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர் கண்ணன் என்கிற கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். அத்துடன்  இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளராகவும் உள்ளார்.

சர்ச்சை பேச்சு:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்து கொண்டார். அப்போது பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ”ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்றும் கூறியிருந்தார்.  இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

புகார் அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்:

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது, மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பாத கூறி  பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே கனல் கண்ணன், பெரியார் குறித்து அவதூறாக பேசும் விடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர். இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.