வீடு தேடி சூர்யாவிற்கு வந்த பார்சல்.. திறந்து பார்த்து மகிழ்ச்சியடைந்த ஜோதிகா

‘சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த விருதினை பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கும் வீடியோ 2D தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு இப்போது ரசிகர்கள் பலராலும் வைராக்கப்பட்டு வருகிறது.

வீடு தேடி சூர்யாவிற்கு வந்த பார்சல்.. திறந்து பார்த்து மகிழ்ச்சியடைந்த ஜோதிகா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் அதே எதிர்பார்ப்புகளோடு படம் அமேசான் ப்ரைமில் வெளியான, இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியிருந்தது. 

சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி கண்டதோடு விமர்சன ரீதியிலும் வெற்றி கண்டது.

இப்படம் வெளியாகி ஓராண்டு முடிவடையவுள்ள தருணத்தில் படத்திற்கு மெர்ல்போர்ன் திரைப்பட விருதுகளில் இருந்து விருது கிடைத்துள்ளது.

படத்திற்காக அனுப்பப்பட்ட விருதினை பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கும் வீடியோ 2D தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு இப்போது ரசிகர்கள் பலராலும் வைராக்கப்பட்டு வருகிறது.