உங்களுக்கு திருமணம் எப்போது ? என்ற ரசிகரின் கேள்விக்கு - ஓப்பனாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!

உங்களுக்கு திருமணம் எப்போது ? என்ற ரசிகரின் கேள்விக்கு - ஓப்பனாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ‘நானும் ரவுடி  தான்’ படம் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசம் கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இப்படி பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வரும்  இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள  ராக்கி திரைப்படம், சமீபத்தில் வெளியாகி சிறந்த விமர்சனங்களை  பெற்று வந்தது. இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர்,  உங்கள் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், "எங்களுக்குள் காதல் தற்போது நன்றாக சென்றுகொண்டிருக்கிறது, மேலும் எங்களுக்கென்று தனி குறிக்கோள்கள் இருக்கின்றது. அதை கூடிய விரைவில் அடைந்துவிட்டு திருமணம் செய்துகொள்வோம். மேலும் சினிமா நட்சத்திரங்களின் திருமணம் என்றால் அதிக செலவாகும், அதையும் சம்பாதித்துவிட்டு, அதற்குள் கொரோனா தொற்றும் படிப்படியாக குறைந்துவிட்டால் விரைவில் திருமணம் செய்துகொள்வோம்" என கூறியுள்ளார்.