வனிதாவை மனம் கவர்ந்த ஹீரோ இவர்தானாம்... எப்போதுமே இவரை தான் பிடிக்குமாம்...!!

விஜய்தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய சூப்பர் ஸ்டார் என கூறி நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வனிதாவை மனம் கவர்ந்த ஹீரோ இவர்தானாம்... எப்போதுமே இவரை தான் பிடிக்குமாம்...!!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் விஜய். இவர் சமீபத்தில் தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜயுடன் சந்திரலேக்கா படத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய்தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய சூப்பர் ஸ்டார் என கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.