நான் ஆகாஷோட பையன் : ரசிகருக்கு அதிரடி பதில் கொடுத்த வனிதாவின் மகன் !!

நீங்கள் வனிதாவின் மகனா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நான் ஆகாஷின் மகன் என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார் நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹிரி.

நான் ஆகாஷோட பையன் : ரசிகருக்கு அதிரடி பதில் கொடுத்த வனிதாவின் மகன் !!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார்.  பின் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். 

வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரி தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் வளர்ந்து வருகிறார். எவ்வளவு முயற்சி செய்தும், வனிதாவிடம் அவர் மகன் வரவில்லை.

மே 23 தனது 21 ஸ்ரீஹரிக்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”என் முதல் மற்றும் என்றென்றும் அன்புக்கு. அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு தாய் தன் குழந்தைகளை நேசிப்பதே அன்பின் தூய்மையான வடிவமாகும்.

அம்மாவாக என்  பிறந்தநாள் வாழ்த்துக்கள். அழகான மற்றும் வலிமையான விருப்பமுள்ள மிகவும் திறமையான மகன் . நீங்கள் எப்போதும் என் லட்டுவாகவே இருப்பீர்கள் . கடவுள் உங்கள் கனவுகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்” என்று மகனுக்கு வாழ்த்து சொல்லி மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீ ஹரியிடம் ரசிகர் ஒருவர், வனிதாவோட பையனா நீங்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீஹரி 'நான் ஆகாஷோட பையன் ப்ரோ' என நறுக்கென பதில் கூறியுள்ளார்.