ரசிகையின் செயலால் அதிர்ந்து போன விஜய் தேவரகொண்டா!!

ரசிகையை ஆரத்தழுவி நெகிழ்ச்சியடைந்த வீடியோ இணையத்தில் வைரல்..!

ரசிகையின் செயலால் அதிர்ந்து போன விஜய் தேவரகொண்டா!!

விஜய் தேவரகொண்டாவின் முகத்தை தனது முதுகில் பச்சைக் குத்திய ரசிகையை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து கட்டியணைத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் எத்தனையோ விஷயங்கள் மாறினாலும், நடிகர்களின் மீதான பாசமும், விருப்பமும் இன்று வரை மாறாமல் இருந்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால் இந்த நடிகர் நாளை நமது மாநிலத்தை ஆள மாட்டாரா என ஏங்கும் அளவிற்கு. 

அதேபோல, தனக்கு பிடித்த நடிகர்களின் உருவத்தை தனது உடம்பில் பச்சைக்குத்திக் கொள்ளும் ரசிகர்களும் இங்கு இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த வகையில் இங்கு ஒரு இளம் பெண் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தமிழிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகைகள் பட்டாளம் உள்ளது. அப்படி ஒரு ரசிகை விஜய் தேவரகொண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அப்படி நேரில் சந்தித்த போது, தனது முதுகில் குத்தியிருந்த டாட்டூவை காண்பித்துள்ளார். இதனை கண்டு மிகவும் நெகிழ்ந்து போன விஜய் தேவரகொண்டா, அந்த ரசிகையை ஆரத்தழுவிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.