விஜய்க்கே அட்வைசா? - சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் பொங்கிய விஜய் ரசிகர்கள்; கொழுந்து விட்டு எரியும் இணைய தளம் !!

தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள டான் படத்தில் பல விஜய் பட குறிப்புகள் இருந்ததால் உற்சாகமடைந்த ரசிகர்கள், படத்தின் கிளைமேக்சில் வந்த ஒரு காட்சி விஜயை தாக்குவது போல இருப்பதாகக் கொந்தளித்து வருகின்றனர். இதனால் இணைய தளங்களே தீப்பற்றி எரிகிறது.

விஜய்க்கே அட்வைசா? - சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் பொங்கிய விஜய் ரசிகர்கள்; கொழுந்து விட்டு எரியும் இணைய தளம் !!

நடிகர் விஜய் சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ் தலைவராக கோலிவுட்டில் வலம் வருகிறார். இடையில் ஒரு சில படங்கள் ஃப்ளாப் ஆனாலும், சமீப காலமாக தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டே வருகிறார் விஜய். ரசிகர்களால் அன்பாக இளைய தளபதி என அழைக்கப்பட்ட இவர், தற்போது தளபதி விஜய்யாக திரையுலகில் வலம் வருகிறார். திரைக்கு வந்தாலே போதும் என்ற அளவிற்கு ரசிகர் கூட்டம் கொண்டுள்ள இவருக்கு, ரசிகர் மன்றம் இயக்கம் போன்றவை உள்ளன.

சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம், அரசியலில் ஈருபடுவதாகத் தகவல்கள் வெளியாகி மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால், விஜய்யும் நேரடியாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் இது ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தான் எந்த ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கவும், அரசியலில் ஈடுபடவும் விரும்பவில்லை என விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் மற்றொரு புறம், விஜயின் தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சி., தான் தான் இந்த நடவடிக்கை எடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இது குறித்து பேசிய அவர், “விஜயை அறிமுகப்படுத்திய நான் தான், 1993 இல் அவருக்கு ரசிகர் மன்றம் துவங்கி வைத்தேன். விஜய்யின் அனைத்து வகையான ரசிகர் மன்ற வேலைகளிலும், முன்னின்று நான் தான் வேலை செய்தேன். ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறிய போதும் நான் தான் இருந்தேன். விஜய்க்கு எது நல்லது என்று எனக்கு தெரியும். நான் எது செய்தாலும், அது விஜயின் நன்மைக்கு தான். இப்போது கூட, ரசிகர்கள் கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அறிவித்த பின்னர், நான் தான் கட்சியின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்தேன்” என பகிரங்கமாக தனியார் ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதன் மூலம், விஜய் வீட்டில் ஒரு பெரிய கருத்து வேறுபாடு இருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

அது மட்டுமின்றி, விஜய்யின் தாய் மற்றும், பாடகியான ஷோபா மக்கள் இயக்கத்தின் பொருளாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் தன் பக்கம் நடந்த கதையைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு எந்தத் தகவலும் கூறாமல் தனது கையெழுத்தைப் பெற்றதாகவும், தனது விருப்பமின்றி கட்சியின் பொருளாளராக நியமித்ததாகவும் தெரிவித்த ஷோபா, கட்சியில் இருந்து விலகி விட்டதாகக் கூறினார். அது மட்டுமின்றி விஜய் தங்களுடன் பேச்சு வார்த்தையில் இல்லாததாகவும் அவர் தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இதைத் தொடர்ந்து, கோர்ட், கேஸ் என ஒரே பரபரப்பாக விஜய்யின் குடும்ப சூழல் ஒரு புறம் இருக்க, மறுபுறம் பல வகையான வெற்றி படங்களைக் கொடுத்து பாக்ஸ் ஆபீசில் மாஸ் காட்டி வருகிறார்.  மே 13ம் தேதி தியேட்டர்களில் வெளியான டான் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அறிமுக இயக்குனரான சிபி சக்கிரவர்த்தி இயக்கும் டான் என்ற படம், கல்லூரியில் நடக்கும் கூத்துகளைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. பிரியங்கா அருள் மொழி, எஸ்.ஜே.சூரியா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், சூரி, சமுத்திரக்கனி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கொண்டுள்ள இந்த படம் இன்று வெளியானது. காதல் கலந்த கல்லூரி கதையான இப்படத்தில் சிவகார்த்திகேயன் குறும்புக்காரனாக நடித்திருக்கிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா பூமிநாதன் என்ற பேராசிரியராகவும், அவருக்கு எதிராக கல்லூரி மாணவர்களின் தலைவராக சிவகார்த்திகேயனும் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் அனிருத்.

இந்நிலையில், படத்தில் பல குறியீடுகள், நடிகர் விஜய் படங்கள் மற்றும் பாடல்களைக் குறிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதனால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு உற்சாகமாக ஆதரவளித்துள்ளனர். ஆனால், படத்தின் இறுதியில், “பெற்றோர்களை கொண்டாடுங்கள், அவர்கள் இருக்கும் பொழுதே” என ஒரு வாசகம் போடப்பட்டது.

இதனை கவனித்த விஜய் ரசிகர்கள் இது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பதாக கோபமடைந்து கொந்தளித்து வருகின்றனர். இதனை இணையத்தில் ஒரு ஃபேக் ஐடி வெளியிட்ட அரை மணி நேரத்திலேயே பதிவு துக்கப்பட்டது. ஆனால், அந்த கருத்து ரசிகர்களுக்கு இடையில் தீயாய் பரவி இணையத்தில் பரபர வென வெடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், விஜய் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.