கிருஷ்ணர் வேடத்தில் தளபதி விஜய்.. #Throwback ஃபோட்டோ வைரல் 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

கிருஷ்ணர் வேடத்தில் தளபதி விஜய்.. #Throwback ஃபோட்டோ வைரல் 

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகளின் பட்டியலில் டாப் லிஸ்டில் நடிகர் விஜய். கடந்த 1992ஆம் ஆண்டு அவரது தந்தை சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு எனும் படம் மூலமாக த மிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

முதல் படமே விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு உள்ள ரசிகர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். ரசிகர்கள் பெரும்பாலும் நடிகர் விஜய்யை அண்ணன் என்று தான் அழைத்து வருகிறார்கள். 

விஜய் படம் வெளியாகும் அன்று திரையரங்குகள் திருவிழா போன்று காட்சியளிக்கும் அந்த அளவிற்கு பட்டாசுகள் பாலாபிஷேகம் என ரசிகர்களின் அலப்பறைகள் அளவுக்கதிகமாக இருக்கும்.

அதேபோல் சமீபகாலமாகவே விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மெர்சல், சர்க்கார், பிகில் மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல் வசூலிலும் சாதனை படைத்தன. தற்போது இவரது நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.