பூஜா ஹெக்டேவுடன் நடனம் ஆட காத்திருக்கும் விஜய்!

கொரோனா காலம் முடிந்ததும், தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

பூஜா ஹெக்டேவுடன் நடனம் ஆட காத்திருக்கும் விஜய்!

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்,  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'தளபதி 65'படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் நடக்கவிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட  உள்ளதாகவும், இப்படத்துக்காக   சாலிகிராமத்தில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் பாடல் காட்சிக்கான அரங்கம்  அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சின்ன டீமுடன் 2 வாரங்கள் இந்த பாடல் காட்சியை விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளனராம்.கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்ததும் வரும் செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என விஜய் கூறியிருந்த நிலையில்,தற்போதுஇதன் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் .